Canada

கனடாவில் 25 துப்பாக்கிகளுடன் 50-வயது மூதாட்டி கைது!

கனடாவினுள் பிரவேசிக்க முயன்ற 50-வயதான மூதாட்டி ஒருவர் 25 துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது, ஒண்டாரியோவின் Fort Erie நகரில் கடந்த புதன் அன்று அரங்கேறியுள்ளது. அங்கு அமைந்துள்ள எல்லை வழியாக அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் ஒரு SUV ரக வாகனம் ஒன்று நுழைந்தது.

அந்த வாகனத்தை சோதனையிட்ட பொலிஸார் அதில் ஒரு காஸ் டாங்க் இருப்பதைக் கண்டனர்.

இதையடுத்து, சந்தேகத்தின்பேரில் அதை வெட்டிப் பார்த்தபோது, அதினுள் 25 கைத்துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், அந்த வாகனத்தை ஓட்டி வந்த மூதாட்டியை உடனடியாக கைது செய்த பொலிஸார் அவர் மீது ஆயுதம் கடத்தியது உட்பட பல குற்றச்சாட்டுகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top