Canada

கனடா வின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கனடாவின் வின்னிபெக்கில் அண்மைக்காலமாக துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வின்னிபெக் பொலிஸாரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்த மாதத்தின் கடந்த 08ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 12 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பில் இந்த காலப்பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், வின்னிபெக்கில் அதிகரித்துள்ள சூட்டு சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top