Canada

கனடா ஹாலிஃபாக்ஸில் பனிப்பொழிவு காரணமாக வாகனம் மோதி ஆண் ஒருவர் உயிரிழப்பு!

கனடாவில் பனிமூட்டம் காரணமாக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஆண் ஒருவர் பரிதாபமான உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவமானது, கனடாவின் ஹாலிஃபாக்ஸில் Kearney Lake Road பகுதியில் வெள்ளிக்கிழமை காலை, 6:43 மணிக்கு நிகந்துள்ளது.

சம்பவத்தன்று, கனடாவில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக, Kearney Lake Road நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்த லாரி ஒன்று பனிப்பொழிவில் சிக்கி விபத்துக்குள்ளானதில் ஆண் ஒருவர் படுகாயமடைந்தார்.

இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் காயங்களுடன் இருந்த குறித்த நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இருப்பினும், அவருக்கு தொடர்ந்து சிகிக்சை அளிக்கப்படத்தில் பேரில் சிகிக்சை பலனின்றி குறித்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை கவனமாக கையாள வேண்டும் என்று அப்பகுதி மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top