News

காமிக்ஸ் உலகின் தந்தை ஸ்டான் லீ 95-வது வயதில் மரணம்!

ஹாலிவுட்டின் சூப்பர் ஹீரோ கதாப்பாத்திரங்களை உருவாக்கிய ஸ்டேன் லீ உடல் நலக்குறைவால் தனது 95-வது வயதில் காலமானார்.

காமிக்ஸ் உலகின் பிதாமகர் என்று வர்ணிக்கப்படும் ஸ்டான் லீ. தனது 95-வது வயதில் திங்கள் காலை(உள்ளூர் நேரப்படி) அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காலமானதாக அவரது மகள் குவாட்டினிங் லீ தெரிவித்துள்ளார்.

மார்வல் காமிஸ் நிறுவனதின் இணை நிறுவனரான இவர் கடந்த 1961 ஆம் ஆண்டு ஜேக் கிர்பி என்பவருடன் இணைந்து, முதல் முறையாக பேன்டாஸ்டிக் போர் காமிக்ஸை வடிவமைத்தார்.

இதையடுத்து, இவர் உருவாக்கிய, ஹல்க், ஸ்பைடர் மேன், ஃபெண்டாஸ்டிக் ஃபோர் உள்ளிட்ட கதாப்பாத்திரங்கள் உலக அளவில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

ஹாலிவுட்டில் தற்போது பிரம்மாண்ட வெற்றியைப் பெறும் படங்கள் என்றால், அது சூப்பர் ஹீரோ படங்கள்தான். அவற்றிற்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளன.

இந்நிலையில், 1922-ம் ஆண்டு நியூயார்க்கில் பிறந்த ஸ்டான் லீ மனைவி ஜோனா கடந்த 2017-ஆம் ஆண்டு இறந்ததை அடுத்து தனது மகளுடன் வசித்து வந்தார். இதையடுத்து, கடந்த ஒரு வருடங்களாக உடல்நல குறைவால் தவித்து வந்த ஸ்டான் லீ அமெரிக்காவில் காலமானார்

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top