Canada

குறைந்த வருமானம் பெறும் பணியாளர்களுக்கான வரி நீக்கம்; டக் ஃபோர்ட் தகவல்!

ஒன்ராறியோ மாகாண அரசாங்கத்திற்கான வரி அறவீட்டில் இருந்து, குறைந்த வருமானம் பெறும் பணியாளர்களுக்கான வரி நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பு தொடர்பாக, முதல்வர் டக் ஃபோர்ட் தலைமையிலான ஒன்ராறியோ அரசாங்கம் இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கையை அவையில் நேற்று முன் தினம் தாக்கல் செய்தது.

அதன் படி, புதிய ஒன்ராறியோ அரசின் இந்த முதலாவது நிதி அறிக்கை சட்டமன்ற வெளியீட்டின் பேரில் பின்பற்ற படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இருப்பினும், தனது முதலாவது நிதிநிலை அறிக்கையை சபையில் முன்வைத்துள்ள டக் போர்ட் அரசு, அதில் 14.5 பில்லியன் டொலர்கள் பற்றாக்குறை காணப்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இதற்கு முன்னர் மாநிலத்திற்கான நிதிப் பற்றாக்குறையின் அளவு இதனை விடவும் அதிகமான காணப்பட்ட நிலையில், தாங்கள் பதவிக்கு வந்து சில வார காலங்களிலேயே அதனை 500 மில்லியன் டொலர்களால் குறைத்துள்ளதாகவும் டக் போர்ட் அரசு தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top