News

சபாநாயகர் தெரிவுக்குழுவை நியமித்தால் பாராளுமன்றத்துடன் இணங்கிச்செல்வோம்

சபாநாயகர் ஆளும் தரப்பினருக்குப் பெரும்பான்மையளித்து தெரிவுக் குழுவை நியமிப்பாராயின் பாராளுமன்றத்துடன் இணங்கிச் செல்வோம். இல்லையேல் அமைச்சரவையை அடிப்படையாக கொண்ட அரசாங்கத்துடன் நாட்டை நடத்திச் செல்ல தீர்மானித்துள்ளோமென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நேற்று அறிவித்தது.

இதேவேளை, எதிர்க்கட்சியினர் முன்வைத்திருக்கும் பிரதமர் செயலாளரின் செலவீனங்களை இடைநிறுத்தும் பிரேரணை சட்டவிரோதமானது என சுட்டிக்காட்டிய ஐ.ம.சு.மு உறுப்பினர்கள் அரசாங்க ஊழியர்கள், ஓய்வூதியக்காரர்கள் மற்றும் சமுர்த்தி பெறுவொருக்கு எவ்வித தடையுமின்றி உரிய நேரத்தில் கொடுப்பனவுகளை வழங்க தாம் நடவடிக்கை எடுப்போமென்றும் கூறினர்.

காலையில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்திய சபாநாயகர் ஆளும் தரப்பினரின் சவால்களுக்கு முகம்கொடுக்க முடியாமலேயே நேற்று பாராளுமன்ற அமர்வுகளுக்கு முகம் கொடுக்காமல் பிரதி சபாநாயகரை அனுப்பி சபையை ஒத்தி வைத்ததாகவும் அவர்கள் விசனம் தெரிவித்தனர்.

ஐ.ம.சு.மு வினர் பாராளுமன்றத்தில் நேற்று விசேட செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினர். அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அதன் உறுப்பினர்கள் மெற்கண்டவாறு கூறினர்.

மேலும் சபாநாயகர் வெளிநாட்டு தூதுவர்களுக்கு வேண்டிய விதத்தில் சபை செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம், நிறைவேற்று அதிகாரத்துக்கும் அரசியலமைப்புக்குமிடையில் பாரிய முரண்பாட்டை தோற்றுவித்து அதற்குரிய களமாக பாராளுமன்றத்தை உருவாக்கியிருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயமென்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இச்செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த தினேஷ் குணவர்தன எம்.பி கருத்து தெரிவிக்ைகயில், –

பிரதமரை நியமிக்கும் மற்றும் பதவிவிலக்கும் அதிகாரம் சபாநாயகருக்கோ பாராளுமன்றத்துக்கோ இல்லையென்பதை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நாம் சபாநாயகரிடம் தெளிவாக கூறியுள்ளோம். பிரதமருக்கு எதிராக நம்பிக்ைகயில்லா பிரேரணை கொண்டு வரும் விடயத்திலும் சபாநாயகர் நிலையியற் கட்டளைகள் சட்டத்தை பின்பற்றியிருக்கவில்லை.

அதேவகையிலேயே எதிர்க்கட்சியினர் பிரதமர் செயலாளரின் செலவீனத்தை இடைநிறுத்தும் பிரேரணையையும் சபாநாயகரின் செயலாளரிடம் கையளித்துள்ளனர். சபையின் அனைத்து செயற்பாடுகளும் சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்படுகின்றன.

நிதி தொடர்பில் அரசாங்கத்தால் முன்வைக்கப்பட வேண்டிய பிரேரணையை எதிர்க்கட்சியினர் கொண்டுவந்திருப்பது வேடிக்ைகக்குரியது. இன்று பாராளுமன்றத்தில் பொலிஸாரோ வேறு எவ்வித படையினரோ இருக்கவில்லை.என்றபோதும் ஆளும் தரப்பினரின் சவால்களுக்கு முகம் கொடுக்க முடியாமலேயே சபாநாயகர் பாராளுமன்றத்துக்கு சமுகமளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த அமைச்சர் விமல்வீரவன்ச கூறுகையில், –

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சபாநாயகர் கரு ஜயசூரியவும் அதிகார பேராசை கொண்டவர்கள். முன்னாள் பிரதமர் தனது பதவி பறிபோனதன் பின்னரும் அலரி மாளிகையை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார். அதேபொன்று சபாநாயகரும் தனது ஆசனத்தை பற்றியபடி தான் நினைத்தபடி சபையை நடத்துகின்றார். தற்போது நாட்டில் அரசாங்கமும் இல்லை பிரதமரும் இல்லையென சபாநாயகர் அறிவிப்பு விடுத்துள்ளார். அரசாங்கம் இல்லையென்றால் எதிர்கட்சியும் இல்லை. ஆளும் தரப்பும் எதிர்க்கட்சியும் இல்லாவிட்டால் பாராளுமன்றமே இல்லையென்பது அவருக்கு புரியவில்லை. எதிர்க்கட்சியினர் ஜனநாயகத்தை விபச்சாரத்துக்கு உட்படுத்தப் பார்க்கிறார்கள்.

அத்துடன் அரசாங்க உழியர்களின் சம்பளங்களுக்கும் ஓய்வூதியக்காரர்களது கொடுப்பனவுகளையும் எதிர்கட்சியினர் இடைநிறுத்தப் பார்க்கிறார்கள். பொதுமக்கள் இதற்கு எதிராக பொராட்டம் நடத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இங்கு அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க கருத்து தெரிவிக்ைகயில்-

சபாநாயகர் நிறைவேற்று அதிகாரத்தை தான் செயற்படுத்தப் பார்க்கும் துரதிஷ்டவசமான நிலைமை தற்போது நாட்டில் உருவாகியுள்ளது. சபாநாயகரின் அனைத்து செயற்பாடுகளும் சட்டத்துக்கும் அரசியலமைப்புக்கும் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கும் முரணானவை.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைத்து சுமார் ஆறு மாதங்கள் கடந்தும் கூட அது விவாதத்துக்கு எடுக்கப்படவில்லை. இங்கு சபாநாயகர் பக்கச்சார்பாக நடந்து கொள்கின்றார். பாராளுமன்றத்தை ஒரு நகைச்சுவை மேடையாக்கியுள்ளார் என்று கூறினார்.

அமைச்சர் பந்துல குணவர்தன கருத்து தெரிவிக்ைகயில்-

பிரதமருக்கு நிதியமைச்சரென்ற வகையில் செலவு செய்வதற்கு டிசம்பர் 31 அம் திகதி வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அது போதாமல் போகும் பட்சத்தில் ஜனாதிபதிக்கு மேலும் மூன்று மாதங்களுக்கு நிதியை வழங்கும் விசேட அதிகாரம் உள்ளது. எதிர்கட்சியினர் பிரேரணையொன்றின் மூலம் பிரதமர் செயலாளரது செலவீனங்களை இடைநிறுத்தினால் எவ்வாறு அரசாங்க உழியர்களுக்கு சம்பளத்தை பெற்றுக் கொடுக்க முடியும். எதிர்க்கட்சியினர் ஆளும் கட்சியுடன் மோதும் பேரில் அரசாங்க உழியர்கள், ஓய்வூதியக்காரர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகளது வயிற்றில் அடிக்கும் செயல் . நாம் இதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.

டளஸ் அழகப்பெரும எம்.பி கருத்து தெரிவிக்ைகயில்-

ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளிலேயே பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்த ஒரேயொரு சபாநாயகர் என்ற பெருமை கரு ஜயசூரியவுக்கே உரித்தாகும். எவ்வாறாயினும் டிசம்பர் 07 அம் திகதி ஆளும்தரப்புக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என்ற நம்பிக்ைக எமக்கு உண்டு என்றும் அவர் கூறினார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top