News

சாலை விபத்தில் சிக்கிய 53 வயது பெண்மணி: காட்டுக்குள் 6 நாட்கள் தவித்த பரிதாபம்

அமெரிக்காவில் சாலை விபத்தில் சிக்கிய 53 வயது பெண்மணி ஒருவர் உதவிக்கு ஆளின்றி 6 நாட்கள் போராடி மீண்டுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள பாலைவனத்தில் குறித்த சாலை விபத்து சம்பவம் நேர்ந்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த வாகனமானது தொலைவில் உள்ள மரங்களுக்கிடையே மோதி தலைகீழாக கவிழ்ந்துள்ளது.

விக்கன்பர்க் பகுதியில் உள்ள 60 ஆம் எண் சாலையிலேயே குறித்த 53 வயது பெண்மணி தமது காரில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

பீனிக்ஸ் பகுதிக்கு 80 கி.மீ தொலைவில் வைத்து அவரது வாகனம் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதில் பாய்ந்து சென்ற வாகனமானது திடீரென்று மேலெழும்பி சாலை அருகாமையில் உள்ள பள்ளத்தில் விழுந்துள்ளது.

இப்பகுதியில் உள்ள மரக்கூட்டத்திடையில் சிக்கி அவரது கார் தலை கீழாக கவிழ்ந்துள்ளது. அக்டோபர் 12 ஆம் திகதி நடந்த இந்த விபத்தானது உலகம் அறியாமலே போயிருக்கும்.

அக்டோபர் 18 ஆம் திகதி அப்பகுதியில் சிக்கித்தவித்த பசுமாடு ஒன்றை அங்கிருந்து வெளியேற்றும் நோக்கில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளே குறித்த விபத்து தொடர்பில் முதன் முதலில் கண்டறிந்துள்ளனர்.

பசுமாட்டை தொடர்ந்து வந்த வனப்பாதுகாப்பு காவலர்கள் விபத்து நடந்த பகுதியில் சாலையின் பாதுகாப்பு வேலி சிதைந்திருந்ததை கண்டறிந்துள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதியில் உள்ள மரத்தில் சிக்கியிருந்த வாகனத்தை கண்டுள்ளனர். ஆனால் வாகனத்தினுள் எவரையும் காணாமல் தேடும்பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் 457 மீற்றர் தொலைவில் படுகாயத்துடன் குற்றுயிராக கிடந்த குறித்த பெண்மணியை கண்டுபிடித்துள்ளனர்.

விபத்து நடந்து 4 நாட்கள் வரையில் காரினுள் இருந்ததாகவும், உயிர் பிழைக்கும் எண்ணம் மேலோங்கியதும், வெளியேறி நடக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஹெலிகொப்டர் உதவியுடன் அவரை பொலிசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top