Canada

சாஸ்கட்சுவானில் கோடாரியால் தாக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதி!

சாஸ்கட்சுவான் பகுதியில் கை கோடாரியில் தாக்கப்பட்ட பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது, 600 பிளொக்- 45ஆவது வீதியில் உள்ள வீடொன்றில் உள்ள 49 வயதான பெண்ணொருவர் கோடாரியால் தாக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, தகவல் அறிந்து வந்த பொலிஸார் காயங்களுடன் இருந்தவரை மீட்டு சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் 49 வயதான ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பொலிஸார் தற்போது தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top