News

ஜமால் கஷோக்கின் படுகொலையில் தொடர்புடைய ஐவருக்கு மரண தண்டனை?

ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் படுகொலையுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள ஐவரும் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடுமென இன்று ரியாத் நகரில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் சவுதி அரேபியாவின் அரச வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் படுகொலையில் மொத்தம் 11 பேர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். இவர்களில் மரணதண்டனையை எதிர்நோக்கியுள்ள ஐவர் கொலையை ஒழுங்குபடுத்துவதிலும் செயற்படுத்துவதிலும் நேரடியாகத் தொடர்புபட்டிருப்பதாக சவுதி அரச வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சவூதி அரேபிய உளவுத்துறைத் தலைவர் அஹ்மத் அல்-அஸிரி, சவுதிதி அரேபியாவுக்கு திரும்பி செல்லுமாறு ஜமால் கஷோக்கியை கட்டாயப்படுத்துவதற்காக 15 பேரைக் கொண்ட குழுவை உருவாக்கியுள்ளதாக சவுதி அரச வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவர்கள் 15 பேரும் பேச்சுவார்த்தைக் குழு, புலனாய்வுக் குழு மற்றும் போக்குவரத்துக்குழு என மூன்று குழுக்களாக பிரிந்து செயற்பட்டுள்ளதாகவும் இதில் பேச்சுவார்த்தைக்கு குழுவின் தலைவரே ஜமால் கஷோக்கியின் கொலைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் சவுதி அரச வழக்கறிஞர் தெரிவித்தார்.

குற்றம்சாட்டப்பட்டவர்களின் அடையாளம் இதுவரை வெளியிடப்படாத நிலையில் இக்கொலைக்கும் சவுதி இளவரசருக்கு எவ்வித தொடர்புமில்லையென அரச வழக்கறிஞர் ஷாலன் பின் ரஹிஹ் ஷலான் தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top