Canada

டொராண்டோ பகுதி துப்பாக்கி சூட்டில் ஆண் ஒருவர் உயிரிழப்பு!

டொராண்டோ Humberlea பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக டொராண்டோ பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது, டொராண்டோவின் அன் ஆர்பர் சாலை, அல்பியன் மற்றும் வெஸ்டன் சாலைகள் அருகே இரவு நேரத்தில் அரங்கேறியுள்ளது.

குறித்த துப்பாக்கி சூடு தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டொராண்டோ பொலிஸார் இரு சக்கர வாகனத்தில் காயங்களுடன் இருந்த நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையடுத்து, மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அந்த நபர் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும், குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவரின் பெயரையோ வயதினையோ மற்றும் சந்தேகத்திற்கிடமான தகவலையும் டொராண்டோ பொலிஸார் வழங்கப்படவில்லை.

மேலும், 2018 ஆம் ஆண்டின் டொரண்டோவின் 89 வது படுகொலையாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top