Canada

டொரண்டோவில் சாலை விபத்து; பெண் ஒருவர் உயிரிழப்பு!

டொரண்டோ ஸ்கார்பரோவில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக டொரண்டோ மாகாண பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தானது, டொரண்டோவின் Ellesmere மற்றும் Neilson சாலைகள் அருகில் திங்களன்று மாலை 6;15 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து, குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அப்பகுதிக்கு விரைந்து வந்தனர். அங்கு பெண் ஒருவர் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்டனர்.

இரண்டு வாகனங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் அப்பகுதியில் சாலைகள் மூடப்பட்டுள்ளன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top