News

தமிழரசுக் கட்சியை இளைஞர்கள் வழிநடத்த முன்வரவேண்டும்! தமிழரசுத் தலைவர் மாவை

இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இளைஞர்கள், யுவதிகள் பெருமளவாக இணைந்து, அதன் பல்வேறு பொறுப்புக்களிலும் பங்குகொண்டு அதனை வழிநடத்த முன்வரவேண்டும்.

– இவ்வாறு தெரிவித்தார் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசா.

வவுனியாவில் நடைபெற்ற வவுனியா மாவட்ட தமிழரசுக் கட்சியின் இளைஞர் மாநாட்டில் கலந்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் தலைமைப்பதவிகளை இளைஞர்கள் அலங்கரிக்கவேண்டும். அதற்காக தற்போதேம எமது கட்சியில் இணைந்து அதன் பல்வேறு படிநிலைகள் ஊடாக அவர்கள் தம்மை வளர்த்துக்கொள்ளவேண்டும். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை நான் ஏற்படுத்திக்கொடுப்பதற்குத் தயாராக உள்ளேன்.

கடந்தமுறை வடக்கு மாகாண அரசுக்கு கல்வியியலாளர்கள், சட்டவாளர்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள் என்று மிகவும் உயர்ந்த ஓர் கல்விச் சமுகத்தவர்களையே தேர்தலில் நாம் நிறுத்தி பெரு வெற்றிபெற வைத்தோம். இவ்வாறான ஒரு நல்ல அறிவுடை சமூகத்தைக் கொண்டு மாகாண சபையை சிறப்பாக வழிநடத்த முடியாமல் முதல்வர் போட்டுடைத்துள்ளார். – என்றார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top