News

தலைவர் பிரபாகரனின் பதுங்குகுழி அழிப்பு

கிளிநொச்சி- புன்னைநீராவிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பயன்படுத்தியதாகக் கூறப்படும், நிலத்தின் கீழ் நான்கு பிரிவுகளைக் கொண்ட பதுங்குகுழியை அழிக்கும் நடவடிக்கை இராணுவத்தினரால் நேற்று முன்னெடுக்கப்பட்டது .

14 ஆவது தேசிய காவல்படையின்,கட்டுப்பாட்டில் இருந்த குறித்த பதுங்குகுழியே உடைக்கப்படுகிறது. தெற்கில் இருந்து வடக்கு நோக்கி வருகின்ற சுற்றுலாப் பயணிகள் இந்த பதுங்குகுழியை கடந்த வருடம் வரை பார்வையிட்டு வந்தனர். எனினும், இவ் வருடம் முதல் அங்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் தற்போது உடைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது ஊடகவியலாளர்களுக்கு புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.அந்தப் பகுதி இராணுவத்தினரின் வசமுள்ள நிலையில் பதுங்குகுழி அகற்றப்படுகின்றமையால் குறித்த காணி விடுவிப்பிற்கான சந்தர்ப்பம் இருப்பதாகவும் அறியமுடிகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top