News

தெரேசோ மே அரசு மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பா? பரபரப்பாகும் பிரித்தானியா

Brexit-க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இதுவரையிலும் நான்கு அமைச்சர்கள் பதவி விலகியுள்ளதால் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.

2019ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா முழுவதுமாக விலகுவதற்கான நடவடிக்கைகளை பிரதமர் தெரேசா மே மேற்கொண்டு வருகிறார்.

இதுதொடர்பாக 585 பக்கங்களை கொண்ட வரைவு ஒப்பந்தத்தின் மீதான விவாதம் கடந்த மூன்று நாட்களுக்கு முன் நடந்தது, சுமார் 5 மணிநேர விவாதத்துக்கு பின்னர் அமைச்சரவையின் ஒப்புதலை தெரேசா மே பெற்றார்.

இந்நிலையில் Brexit-க்கு எதிர்ப்பு தெரிவித்து இதுவரையிலும் நான்கு அமைச்சர்கள் பதவி விலகியுள்ளதால், தெரேசா மே அரசுக்கு பின்னடைவு எழுந்துள்ளது.

பதவி விலகிய அமைச்சர்களின் முக்கிய நபராக பார்க்கப்படும் அமைச்சர் Dominic Raab,

ஐரோப்பிய ஒன்றியத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள Brexit ஒப்பந்தத்தில் அபாயகரமான பிழைகள் இருப்பதாகவும், இதன் காரணமாகவே தாம் அமைச்சரவையில் இருந்து பதவி விலகியதாகவும் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி ஐரோப்பிய ஒன்றியத்தின் மறைமுக மிரட்டலை எதிர்கொள்ள பிரித்தானியா தயாராக வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனிடையே பதவி விலகிய அமைச்சர் Dominic Raab வகித்துவந்த Brexit செயலாளர் பொறுப்பை Michael Gove என்பவருக்கு பரிந்துரைத்துள்ளதாகவும், அவர் அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்றே உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், Brexit விவகாரத்தில் வேறுபட்ட ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் வாய்ப்பு வழங்கும் உறுதியை Michael Gove கோரியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே தெரேசா மே அரசு மீது நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு நடத்த உறுப்பினர்கள் கடிதம் அளித்து வருகின்றனர்.

ஆனால் 48 உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையை தொடவில்லை என்றே உறுதிப்படுத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் முக்கிய உறுப்பினராக பார்க்கப்படும் Jacob Rees-Mogg, அரசுக்கு எதிரான எந்த ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கையிலும் தாம் ஈடுபடவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமக்கு எந்தவித தலைமைத்துவ குறிக்கோள்கள் எதுவும் சொந்தமாக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவையில் 15 சதவீதம், அதாவது 48 எம்பிக்கள் கடிதம் கொடுக்கும் பட்சத்தில் நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு நடத்தப்படும்.

இதுகுறித்து பிரதமர் தெரேசா மே கூறுவதாவது,

‘‘நமது சட்டம், எல்லைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும், ஒற்றை சந்தையிலிருந்து வெளியேறவும் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இந்த விஷயங்கள் மீது பிரித்தானிய மக்கள் கவலை கொண்டிருப்பதாலே, அவர்கள் வாக்களித்தபடி பிரக்சிட்டை நிறைவேற்ற உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

நான் என் வேலையை செய்து கொண்டிருக்கிறேன். மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் சரியான விஷயத்தை செய்து கொண்டிருக்கிறேன். எனவே எந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கும் தயார்” என்று தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top