Canada

தெற்கு ஒன்ராரியோ விமான விபத்து; தம்பதியினர் இருவர் உயிரிழப்பு!

தெற்கு ஒன்ராரியோ விமான நிலையத்தில் ஒரு சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே தம்பதியினர் இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தானது, ஒன்ராரியோ விமான நிலையத்தில் ஒரு சிறிய விமானம் ஒன்று தரையிறங்க முயன்றபோது, செவ்வாய்க்கிழமை காலை 1:30 மணியளவில் நிகழ்ந்துள்ளது.

இதில், 81 வயதான விமானியான ரன் சேம்பர்லினும் அவரது 76 வயதான மனைவி மில்ட்ரட்டும் உயிரிழந்ததாக ஒன்ராரியோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த விமான நிலையத்தின் ஓடுபாதையின் சமிக்ஞை விளக்குகள் சரிவர இயங்காததால் விமானி தனது கட்டுப்பாட்டை இழந்ததில் இந்த விமான விபத்து ஏற்பட்டிருக்கலாம் என விமான நிலையப் பாதுகாப்புப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், உயிரிழந்த விமானி மிகவும் திறமையானவர் எனவும், அவரிடம் இவ்வாறான மேலும் மூன்று சிறியரக விமானங்கள் இருந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இவ்விபத்துச் சம்பவம் தொடர்பாக ஒன்ராரியோ பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top