Canada

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை வருத்தமளிப்பதாக கனேடிய அரசாங்கம் தெரிவிப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்றிரவு(வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை வருத்தமளிப்பதாக கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கனடாவின் வெளிவிவகார அமைச்சின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இலங்கையின் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான முடிவால் கனடா மிகவும் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.

இந்த அரசியல் நிச்சயமற்ற தன்மை இலங்கையின் ஜனநாயக எதிர்காலத்திற்கு, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றின் மீதான அதன் கடப்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்“ என, அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தொடர்ச்சியாக அதிருப்தி வெளியிட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top