News

நான்கு நாட்கள் கடந்தும் மீட்கப்படும் சடலங்கள்: பரபரப்பில் பிரான்சின் மார்செய் நகரம்

பிரான்சின் மார்செய் நகரில் இடிந்து வீழ்ந்த குடியிருப்புக் கட்டங்களின் இடிபாடுகளில் இருந்து, எட்டாவது சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

இதுவே இறுதி சடலம் எனக் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குடியிருப்பு இடிந்து வீழ்ந்த சமயத்தில், இந்த குடியிருப்பில் இருந்த 5 பேரும், வெளியே இருந்த மூவருமே காணாமற் போயிருந்தனர் எனவும், தற்போது எட்டு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

60 இற்கும் மேற்பட்ட தீயணைப்புப் படையினர், 690 கனமீற்றர்கள் இடிபாடுகளை வெளியேற்றி உள்ளனர்.

மொத்தமாக 1500 மீற்றர்கள் இடிபாடுகள் வெளியேற்றப்பட வேண்டிய நிலையில், அதில் மூன்றில் ஒரு பங்கே வெளியேற்றப்பட்டுள்ளது.

அனைத்து சடலங்களும் மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியிருக்கும் இடிபாடுகள் விரைவாகவே வெளியேற்றப்படும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்செய் நகரில் இரண்டு கட்டிடங்கள் ஒன்றன் பின் ஒன்றாக இடிந்து விழுந்தன. அதனைத் தொடர்ந்து, இவற்றிற்கு நடுவில் இருந்த மற்றொரு கட்டிடமும் பாதுகாப்பு கருதி, தீயணைப்பு வீரர்களால் இடிக்கப்பட்டது.

இந்த விபத்தில் பலியானவர்கள் குறித்து தெளிவான தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், 8 பேர் வரை இறந்திருக்கலாம் என்று அப்போது கூறப்பட்டது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top