News

பத்திரிகையாளரை கொல்ல பயன்படுத்திய ஆயுதங்கள்: பகீர் கிளப்பும் பட்டியல்

துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்து கொல்லப்பட்ட பத்திரிகையாளர் தொடர்பில் முக்கிய தகவலை துருக்கி பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.

சவுதி பத்திரிகையாளர் கசோகி கொலை தொடர்பில் சம்பவத்தன்று பயன்படுத்திய ஆயுதங்கள் குறித்த பட்டியலை துருக்கி பத்திரிகை தற்போது வெளியிட்டுள்ளது.

பத்திரிகையாளர் கசோகியை கொல்ல சவுதி வாடகை கொலைகாரர்கள் மின்சாரத்தால் செயல்படும் கருவிகள், கத்தரிக்கோல் மற்றும் மருத்துவர்கள் பயன்படுத்தும் கூரான கத்திகள் என பயன்படுத்தியதாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கசோகியை கொலை செய்த பின்னர் சவுதி அரேபியாவின் அந்த 15 பேர் குழு துருக்கியில் இருந்து தப்பியபோது விமான நிலையத்தில் அவர்களின் பெட்டிகளை ஸ்கேன் செய்ததில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் கசோகி கொலையானது திட்டமிடப்பட்டு நடந்ததாகவும், விபத்து அல்ல எனவும் அம்பலமாகியுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top