News

பரபரப்பான சூழலில் இலங்கை நாடாளுமன்றிற்குள் நுழைந்த அமெரிக்க தூதுவர்

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு நேற்று கொழும்பு உயர் நீதிமன்றம் தடை உத்தரவு விதித்த நிலையில் இன்றைய தினம் நாடாளுமன்றம் கூடியிருந்தது.

இந்த விசேட அமர்வை பார்வையிட சென்ற போது தான் எடுத்த புகைப்படமொன்றை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Teplitz தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அத்துடன், ஜனநாயகத்தை செயல்படுத்துவதில் மீண்டும் ஒருமுறை அரசியலமைப்பு ரீதியான பாத்திரத்தை இலங்கை நாடாளுமன்றம் நிறைவேற்றி வருகின்றது எனவும் அவர் அந்த பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் நாடாளுமன்றம் நாளைய தினம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை முதல் கொழும்பு அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

View image on Twitter

Honored to attend reconvening of #Srilanka Parliament this morning to see #democracy in action. Very lively but glad this institution is once again fulfilling constitutional role @KaruOnline @MaithripalaS

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top