News

பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல் விலைக்கு எதிராக மக்கள் போராட்டம்; 400-பேர் காயம்! 157-பேர் கைது…

பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 400-க்கும் மேற்பட்டோர் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வெகுவாக உயர்ந்தது. அத்துடன் வருகிற ஜனவரி 1-ம் தேதி முதல் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயரும் என அதிபர் இம்மானுவல் மெக்ரான் அறிவித்தார்.

இதற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் நேற்று முன்தினம் முதல் நாடு முழுவதும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நகரின் முக்கிய சாலைகளில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏற்பட்ட வன்முறை தாக்குதலில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.

இதில், பொலிஸார் உட்பட 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் அதில் 14 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் கிரிஸ்டோப் கேஸ்டனர் தகவல் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை மீண்டும் அதிகரித்து வருவதால், பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல், டீசல் மீதான வரி சமீபத்தில் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த போராட்டம் காரணமாக 157-பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top