News

பிரித்தானியாவில் இன்சூரன்ஸ் பணம் 2 மில்லியன் பவுண்டை வாங்க மனைவியை கொலை செய்த கணவன்…

பிரித்தானியாவில் இளம் பெண் மர்மமாக இறந்து கிடந்த சம்பவத்தில் அவரது கணவரே பணத்திற்காக கொலை செய்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவின் Middlesbrough-ல் இருக்கும் Linthorpe பகுதியில் Mitesh Patel(37), இவரின் மனைவி Jessica(34) ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

இருவரும் Linthorpe-ல் மருந்து கடையில் ஒன்றாக வேலை பார்த்து வந்தனர். இந்த கடை அவர்களின் சொந்த கடை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மே மாதம் 14-ஆம் திகதி Jessica வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதனால் இது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டதில் ஒருவரை கைது செய்தனர். அதன் பின் இது குறித்த வழக்கு Teesside Crown நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் Jessica திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. இந்த கொலையை அவரது கணவரான Mitesh Patel செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், அவரைப் பற்றி சில திடுக்கிடும் தகவல்கள் சில தினங்களுக்கு முன் வெளியானது.

அதில், அவர் மனைவிக்கு உண்மையாக இல்லை எனவும், ஆண்களுக்கான இணையதளம் என்று கூறப்படும் Grindr சைட்டில் இவர் பல ஆண்களிடம் பேசியுள்ளார். சில நேரங்களில் அவர்களிடம் நெருக்கமாக இருந்துள்ளார் என்றும் கூறப்பட்டது.

அதன் பின் இது தொடர்பான விசாரணை நேற்று நடைபெறும் என்று கூறப்பட்டது.

இதையடுத்து நேற்று நடைபெற்ற விசாரணையில் Mitesh Patel தான் மனைவியை கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அவர் கொலை செய்து மனைவிக்கு வரவிருக்கும் இன்சூரன்ஸ் பணம் 2 மில்லியன் பவுண்டை வாங்கிக் கொண்டு, ஆண் காதலனுடன் அவுஸ்திரேலியா செல்ல திட்டமிட்டுள்ளார் என்று உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் இறந்த Jessica-வின் கழுத்தில் காயங்கள் இருந்தன. அதன் பின் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவரின் கணவர் மீது சந்தேகம் எழுந்தது.

இதனால் அவரைப் பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அவர் மனைவியை எப்படி கொலை செய்வது போன்றவைகளை இணையதளங்களில் பார்த்துள்ளார். சிலவற்றை நீக்கினாலும், பொலிசாருக்கு போதுமான ஆதாரம் கிடைத்துள்ளது.

அவர் ஆண்கள் மீது அதிகம் விருப்பம் கொண்டவர் என்று கூறப்படுகிறது. இதனால் அவர் தன்னுடைய ஆண் காதலனுடன் அவுஸ்திரேலியாவில் புதிய வாழ்க்கையை துவங்குவதற்கு முடிவு செய்துள்ளார்.

அதன் காரணமாக மனைவியை கொலை செய்துள்ளார்.

இதற்கு அவர் டெஸ்கோ பேக்கை பயன்படுத்தியுள்ளார். கொலை செய்த பின்பு மனைவியின் பெயரில் இருக்கும் சுமார் 2 மில்லியன் பவுண்ட் மதிப்புல்லான இன்சுரன்சுகளை வாங்கிவிட்டு அவுஸ்திரேலியாவில் செட்டில் ஆக முடிவு செய்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது.

நேற்றைய விசாரணையின் போது இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன் பின் தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் விசாரணை எப்போது வருகிறது என்பது குறித்து தெரியவில்லை.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top