News

பிரித்தானியாவில் பெண் பொலிசை காரிலிருந்து இழுத்து வீசிய திருடன்: அதிர்ச்சி வீடியோ !

பிரித்தானியாவில் ஆயுதம் ஏந்திய திருடன் ஒருவன் காரிலிருந்த பெண் பொலிஸ் ஒருவரை இழுத்து கீழே வீசிவிட்டு தப்ப முயலும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளையடித்து விட்டு செல்லும் கொள்ளையர்களில் ஒருவன் தப்புவதற்காக பெண் பொலிசார் அமர்ந்திருக்கும் கார் ஒன்றின் கதவைத் திறந்து அதிலிருந்த Ellie Young என்னும் பெண் பொலிஸ் ஒருவரை கீழே இழுத்து தள்ளி விட்டு தப்ப முயல்கிறான்.

அந்த காரிலிருந்த இன்னொரு பொலிசாரும் காரை விட்டு இறங்கி கீழே விழுந்த தனது சகாவை மீட்க ஓடுகிறார்.

ஆனால் அதற்குள் சுதாரித்து எழுந்த Ellie Young திருடனைப் பிடிக்க முயற்சி செய்கிறார்.

சம்பவத்தைப் பார்த்த பொதுமக்களில் இருவரும் அவர்களுக்கு உதவ ஓடுகிறார்கள். பின்னர் இன்னொரு வாகனத்தில் வந்த பொலிசாரின் உதவியுடன் அந்த திருடன் கைது செய்யப்பட்டான்.

கீழே விழுந்த Ellie Youngக்கு கை, கால் மற்றும் கழுத்து ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது.

அந்த திருடனின் பெயர் Owen Smith (29), அவனுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வனுடன் வந்த திருடன் இதுவரை பொலிஸ் பிடியில் சிக்க வில்லை. பொலிசார் தொடர்ந்து அவனைத் தேடி வருகிறார்கள்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top