News

பிரித்தானியாவில் பெற்ற குழந்தைக்கு தண்ணீர் கூட கொடுக்காமல், கை, கால்களை கட்டி, கூண்டுக்குள் அடைத்து வைத்து கொன்ற தாய்!!

பிரித்தானியாவில் காதலனுடன் சேர்ந்து, பெற்ற குழந்தைக்கு தண்ணீர் கூட கொடுக்காமல், கை, கால்களை கட்டி, கூண்டுக்குள் அடைத்து வைத்து கொன்ற தாய்க்கு தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த லாரன் கோய்லே (20) என்பவர் தன்னுடைய காதலனுடன் சேர்ந்து கொண்டு, பிறந்து 19 மாதங்களே ஆனா எல்லி மே என்ற குழந்தையை கூண்டு ஒன்றுக்குள் அடைத்து வைத்துள்ளார்.

மறுநாள் காலையில் குழந்தை நீண்ட நேரமாகவும் அழாமல் இருந்துள்ளது. உடனே தன்னுடைய தந்தைக்கு மெசேஜ் செய்துள்ளார்.

வீட்டிற்கு வந்த லாரனின் தந்தை, குழந்தையின் இருப்பிடத்தை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். ஏதோ தவறு நடந்துவிட்டது என்பதை அறிந்த லாரனின் தந்தை குழந்தை வைக்கப்பட்டிருந்த கூண்டு பற்றி கேட்ட பொழுது, இரவு நேரத்தில் குழந்தை வெளியில் சென்றுவிட கூடாது என்பதற்காக தான் அப்படி ஒரு கட்டிலை ஏற்பாடு செய்ததாக லாரன் கூறியுள்ளார்.

இதற்கிடையில் அங்கிருந்து மீட்கப்பட்ட குழந்தை ஆம்புலன்ஸ் உதவியுடன் வேகமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு தீவிரமான முயற்சிக்கு பின்னர் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் குழந்தைக்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், கை, கால்கள் கட்டப்பட்டு முகம் குப்புற படுக்க வைக்கட்டதும், தண்ணீர் எதுவும் குடிக்காததால் உடலில் வெப்பம் அதிகமடைந்து குழந்தை இறந்திருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து குழந்தையின் இறப்புக்கு காரணமாக இருந்த லாரன் மற்றும் அவருடய காதலன் Hitchcott-ஐ கைது செய்து பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு வழக்கினை விசாரித்த நீதிபதி தங்களின் சுயநலத்திற்காக குழந்தையின் உயிரிழக்க காரணமாக இருந்த பெற்றோருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top