News

பிரித்தானியாவை அதிரவைத்த கூட்டு துஸ்பிரயோகம்: 100 பேர் சேர்ந்து 16 வயது சிறுமியை வேட்டையாடிய கொடூரம் !!

இங்கிலாந்தில் 16 வயதிற்குட்பட்ட சிறுமியை 100 பேர் கூட்டாக சேர்ந்து துஸ்பிரயோகம் செய்த வழக்கில் 6 பேருக்கு 101 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் ஷெஃபீல்டு மற்றும் ரோதர்ஹாம் பகுதியில் வசித்து வரும் ஆசியாவை பூர்விகமாக கொண்ட, முகம்மது இம்ரான் அலி அக்தர் (37), நாபீல் குர்ஷித் (35), இக்லக் யூசுஃப் (34), தன்வீர் அலி (37), சலா அஹ்மத் எல்-ஹகம் (39) மற்றும் ஆசிப் அலி (33) ஆகிய 6 பேரும் சேர்ந்து 14 முதல் 16 வயதிற்குட்பட்ட 5 சிறுமிகளை கூட்டு துஸ்பிரயோகம் செய்துள்ளனர்.

மேலும் அந்த சிறுமிகளை தங்களுடைய நண்பர்களுக்கு அனுப்பி வைத்து அவர்களையும் துஸ்பிரயோகம் செய்யவைத்துள்ளனர்.

நண்பர்கள் போல சிறுமிகளிடம் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, அவர்களுக்கு மது மற்றும் போதைப்பொருட்களை கொடுத்து துஸ்பிரயோகம் செய்துள்ளனர்.

1998 முதல் 2008-ற்கு உட்பட்ட காலக்கட்டத்தில் தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அங்கு இவர்களால் பாதிக்கப்பட்ட 16 வயதிற்குட்பட்ட சிறுமி, தன்னை 6 பேர் சேர்ந்து துஸ்பிரயோகம் செய்ததோடு, மேலும் சில நபர்களுக்கு அனுப்பி வைத்ததாகவும், குறைந்தபட்சம் தன்னை 100 பேர் சேர்ந்து துஸ்பிரயோகம் செய்திருப்பார்கள் எனக்கூறி பகீர் கிளப்பினார்.

இதனை தொடர்ந்து மற்றொரு சிறுமி தன்னை காட்டுப்பகுதியில் வைத்து கூட்டு துஸ்பிரயோகம் செய்து, தூக்கி வீசி சென்றதாகவும் தெரிவித்தார்.

அடுத்தடுத்த வழக்குகளை கேட்டு வேதனையடைந்த நீதிபதி, குற்றவாளிகள் 6 பேருக்கும் 101 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

முன்னதாக கடந்த மாதம் 20ம் தேதியன்று இங்கிலாந்து சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்த ஆசியாவை சேர்ந்த 20 குற்றவாளிகளுக்கு 221 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

முகப்புக்கு செல்லலங்காசிறிக்கு செல்ல

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top