News

புறப்பட்ட 6 வினாடிகளில் தரையில் விழுந்து வெடித்து சிதறிய விமானம்

அமெரிக்காவில் புறப்பட்ட 6 வினாடிகளில் சிறிய ரக போர் விமானம் ஒன்று தரையில் விழுந்து வெடித்து சிதறும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் விஸ்கொன்சின் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் சிஇஓ அதிகாரியாக பணியாற்றி வருபவர் 50 வயதான மார்டின் திபிட்ஸ். இவருக்கு பெலிண்டா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

1957களில் உருவாக்கபட்ட போர் விமானங்களில் தற்போது 6 விமானங்கள் மட்டுமே உலகம் முழுவதிலும் உள்ளன. இவை அனைத்தும் ஒரு இன்ஜினை மட்டுமே கொண்டு செயல்படும் வகையில் அமைக்கப்பட்டவை.

மார்டின் கடந்த ஜூன் 20-ம் தேதியன்று மாலை 4 மணிக்கு, ஷைபாய்நகர் கவுண்டி மெமோரியல் விமான நிலையத்திலிருந்து, அரிய வகை போர் விமானத்திலிருந்து புறப்பட்டு சென்றார்.

அவரின் பின் பக்கமாக மற்றொரு விமானமும் புறப்பட்டு சென்றது. விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்பட்ட 6 வினாடிகளில் அருகாமையில் இருந்த பால் பண்ணையின் மீது விழுந்து நொறுங்கியது.

இந்த சம்பவத்தில் பண்ணையில் இருந்த 50 பசுமாடுகளுடன் சேர்ந்து விமான ஒட்டியும் பரிதாபமாக பலியாகினர். மேலும் பண்ணையில் வேலை செய்து வந்த இரண்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பொலிஸார், தற்போது முதல் தகவல் அறிக்கையை தயார் செய்து சமர்ப்பிக்க உள்ளனர். இதுதொடர்பாக விபத்து ஏற்பட்ட வீடியோவினையும் தற்போது வெளியிட்டுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top