News

மறைக்கப்பட்ட கோத்தாவின் செயல்! அம்பலப்படுத்தும் அரசியல் முக்கியஸ்தர்

கோத்தபாய ராஜபக்ஸவினால் புதிய உற்பத்தி தளமாக அடையாளப்படுத்தப்பட்ட ரிபோலியே அவரது சித்திரவதை முகாம் என முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

யார் பிரதமர் என்ற தலைப்பில் கொழும்பில் நேற்று நடந்த மாநாடொன்றில் கலந்து கொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

வெளிநாட்டு பிரஜா உரிமையை வைத்துக்கொண்டு சிலர் தேசப்பற்றாளன் என்று கூறுகின்றார்கள்.

கடந்த காலங்களாக எங்கே கோத்தபாய என்று தேடினேன். அவரைக் கண்டு பிடிக்க முடியாமல் போய்விட்டது. ராஜபக்ஸவிற்கு வெளிநாடுகளிலுள்ள சொத்துக்களை முடக்கப்போவதாக கூறியதையடுத்து அமைதியாகி விட்டார். இது தான் அவர்களது தேசப்பற்று.

பயங்கரவாதிகளை நாங்கள் தான் தோற்கடித்தோம் என மார் தட்டிக்கொள்கிறார்கள். அவர்களுக்கு நாங்கள் ஒன்று சொல்ல வேண்டும். விடுதலைப்புலிகளுடன் போர் நடந்தது.

போரின் பின்னர் 1200 ஆக இருந்த புலனாய்வு அதிகாரிகளின் எண்ணிக்கையை கோத்தாபய 7000 ஆக அதிகரித்தார். நாடு பூராகவும் இராணுவ புலனாய்வு உறுப்பினர்களை அனுப்பினார்.

அதன் பிரதான நிலையமாக கொழும்பு புறக்கோட்டை ரயில்வே நிலையத்திற்கு அருகிலுள்ள ரிபோலியை பயன்படுத்தினார். புதிய உற்பத்தி தளமாக ரிபோலி கோத்தாபாயவினால் அடையாளப்படுத்தப்பட்ட போதிலும் அங்கு தான் அவரது சித்திரவதை முகாம் இருந்தது.

அச் சித்திரவதை முகாமை மூடி மறைக்கவே புதிய உற்பத்தி என்கின்ற தளத்தை அறிமுகப்படுத்தினார் என குறிப்பிட்டுள்ளார்.

முகப்புக்கு செல்லலங்காசிறிக்கு செல்ல

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top