News

மின்னல் தாக்கிய விமானம்… ஜன்னல் வழியே தூக்கி வீசப்பட்ட இளம்பெண்: காட்டுக்குள் திக் திக் நிமிடங்கள்

பெரு நாட்டில் பறக்கும் விமானத்தில் இருந்து ஜன்னல் வழியே தூக்கி வீசப்பட்ட இளம்பெண் ஒருவர் தாம் உயிர் தப்பியது தொடர்பில் மனம் திறந்துள்ளார்.

பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் இருந்து அமேசானிய மழைக்காடு நகரமான Pucallpa-கு தமது தாயாருடன் கடந்த 1971 ஆம் ஆண்டு அப்போது 17 வயதன ஜூலியன் கோப்கே என்பவர் புறப்பட்டு சென்றுள்ளார்.

LANSA விமான சேவை நிறுவனத்தின் அந்த விமானமானது 91 பயணிகளுடன் பேய் மழை, இடி மின்னலுக்கு நடுவே பறந்துள்ளது.

அப்போது திடீரென்று சக்தி வாய்ந்த மின்னல் ஒன்று குறித்த விமானத்தின் இறக்கை பகுதியில் அமைந்துள்ள இயந்திரங்கள் ஒன்றில் பலமாக தாக்கியுள்ளது. இதில் கரணம் மறிந்த விமானமானது விமானியின் கடும் முயற்சியால் மீண்டும் பறந்துள்ளது.

ஜூலியனின் தாயார் அப்போது, அனைத்தும் முடிவுக்கு வரப்போகிறது. நாம் சாகப் போகிறோம் என சத்தமாக கத்தியுள்ளார்.

அடுத்த நொடி தாம் பேரமைதியை உணர்ந்ததாகவும், தாம் அமர்ந்திருந்த இருக்கையுடன் விமானத்தில் இருந்து பெயர்ந்து தரை நோக்கி விழுவதையும் உணர்ந்துள்ளார்.

ஆனால், தமது தாயாரும் எஞ்சிய பயணிகளும் அந்த விமானத்திலேயே சிக்கியிருந்துள்ளனர்.

விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து 2987 மீற்றர் உயரத்தில் இருந்து ஜூலியன் வனப்பகுதி ஒன்றில் விழுந்துள்ளார்.

டிசம்பர் 24 ஆம் திகதி மாலை நடந்த இச்சம்பவத்திற்கு பின்னர் முழு இரவும் சுய நினைவை இழந்த நிலையில் அந்த வனப்பகுதியில் ஜூலியன் கிடந்துள்ளார்.

உதவிக்கு கோருவதற்கே அவருக்கு சுமார் 12 மணி நேரமாகியுள்ளது. பின்னர் ஆபத்தான கட்டத்தில் உயிர் தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என தந்தை தமக்கு அளித்திருந்த அடிப்படை பயிற்சியை பயன்படுத்தி நதிக்கரை ஒன்றிற்கு வந்த அவர் அங்கிருந்து தப்பியுள்ளார்.

அமேசான் வனப்பகுதியில் நீண்ட 10 நாட்கள் போராடிய ஜூலியன், ஒருவழியாக படகு ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

11-வது நாள் அங்கிருந்த சில ஊழியர்கள் ஜூலியனை மீட்டு, உணவும் அளித்து மருத்துவமனைக்கு சேர்ப்பித்துள்ளனர்.

இதனிடையே ஜூலியனின் தாயாரும் அந்த விமான விபத்தில் இருந்து தப்பியதாகவும், ஆனால் படுகாயம் காரணமாக அடுத்த நாளே அவர் மரணமடைந்ததாகவும் பின்னர் தகவல் வெளியானது.

91 பேர் பயணமான LANSA விமானத்தில் இருந்து ஜூலியன் மட்டுமே உயிர் பிழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top