News

மிரட்டும் உலக நாடுகளிடம் அடக்கம் காட்டும் மஹிந்த!

சமகாலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் உலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து இன்று விலகிய மஹிந்த, பொதுஜன பெரமுன கட்சியில் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டார்.

இன்றைய தினத்திலிருந்து அந்தக் கட்சியின் தலைமைத்துவ பதவியை மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டார்.

இதன்போது வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் மத்தியில் பிரதமர் மஹிந்த கருத்து வெளியிட்டார்.

இலங்கையின் உண்மையான நிலைமை தொடர்பில் சர்வதேசம் புரிந்து கொள்ள வேண்டும் என மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் ரீதியாக நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதுடன், உலக நாடுகளின் கடும் அழுத்தத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முகங்கொடுத்துள்ளார்.

ஜனநாயகத்திற்கு எதிராக ஜனாதிபதி செயற்பட்டு வருவதாகவும், இதன் காரணமாக இலங்கை மீது பல்வேறு தடைகளை விதிக்க போவதாக சர்வதேச நாடுகள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முகப்புக்கு செல்லலங்காசிறிக்கு செல்ல

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top