News

மீண்டும் நேரடி அரசியலில் சந்திரிக்கா! மைத்ரி – மஹிந்த கூட்டணிக்கு சிக்கலா?

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை முழுமையாக அழித்துவிடுவதற்காக சூழ்ச்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவருவதாக கடும் விசனம் வெளியிட்டுள்ளசுதந்திரக் கட்சியின் போசகர்களில் ஒருவரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காகுமாரனதுங்க, தனது கட்சியை பாதுகாப்பதற்கு தன்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்போவதாக அறிவித்திருக்கின்றார்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி வெற்றிபெற்ற நாட்டு மக்களின்அபிலாசைகள் அனைத்தையும் காட்டிக்கொடுத்தது மாத்திரமன்றி நாட்டு மக்களுக்கு துரோகம்இழைத்த தரப்பினருடன் கூட்டுச் சேர்ந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியை முழுமையாகஇல்லாதொழித்துவிடும் முயற்சிகளில் சிலர் ஈடுபட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதிசந்திரிக்கா பணடாரநாயக்க குமாரனதுங்க குற்றம்சாட்டியிருக்கி்ன்றார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகரான அமரர் எஸ்.டபிள்யூ,ஆர்.டி.பண்டாரநாயக்கமற்றும் அவரை அடுத்து மூன்று தசாப்தகாலமாக அந்தக் கட்சியின் தலைவராக விளங்கிளஅமரர் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோரின் புதல்வியாரான முன்னாள் ஜனாதிபதிசந்திரிக்கா குமாரனதுங்கவும் ஒரு தசாப்தகாலங்களுக்கு மேல் சுதந்திரக் கட்சியின்தலைமைப் பதவியை வகித்தவர் ஆவார்.

முன்னாள் அரச தலைவரும் தற்போயைத பிரதமருமான மஹிந்த ராஜபக்ச சுதந்திரக்கட்சியின் தலைவராக பதவியேற்றதை அடுத்த ஓரம்கட்டப்பட்டிருந்த சந்திரிக்கா, தற்போதைய அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியின் தலைமைப்பதவிக்கு வந்ததை அடுத்து மீண்டும் கட்சியின் போசகராக உள்வாங்கப்பட்டார்.

இந்த நிலையில் மஹிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் பதவியை வழங்கி, அவரது தலைமையிலான அணியினருடன் இணைந்து கூட்டணி அமைத்துள்ளமை தொடர்பில்கடும் அதிருப்தியில் இருக்கும் சந்திரிக்கா குமாரனதுங்க, இன்றுதனது ஊடகப்பிரிவு ஊடாக பகிரங்கமாகவே தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கின்றார்.

குறிப்பாக ஜனவரியில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் சிறிலங்காசுதந்திரக் கட்சியினரை சிறிலங்கா பொதுஜன முன்னணிடன் இணைத்து தாமரை மொட்டுச்சின்னத்தில் போட்டியிட அவ்வாறு இல்லாவிட்டால் தாமரை மொட்டுக் கட்சியின் கோரிக்கைக்குஅமைய வேறுஒரு சின்னத்தில் போட்டியிடுவது என்றும் வைப்பதற்கு மஹிந்தவும் –மைத்ரியும் இணக்கம் கண்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளதை அடுத்தே சந்திரிக்கா இந்தஎதிர்ப்பை வெளியிட்டிருக்கின்றார்.

ஜனவரி எட்டு புரட்சி என்று அழைக்கப்படும் மஹிந்தவை ஜனாதிபதி பதவியில்இருந்து அகற்றி மைத்ரியை ஜனாதிபதியாக பதவியில் அமர்த்திய தினம் என்பது சிறிலங்காசுதந்திரக் கட்சி நாட்டின் ஏனைய கட்சிகளுடன் கூட்டு சேர்ந்த உன்னதமான நாட்டைகட்டியெழுப்புவதற்காக நல்லாட்சியொன்றை ஏற்படுத்த மேற்கொண்ட முயற்சியை மீண்டும்வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றும் சந்திரிக்கா கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை தாமரை மொட்டுக் கட்சியான சிறிலங்கா பொதுஜன முன்னணியிடம் சிறிலங்காசுதந்திரக் கட்சியை அடகுவைப்பதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சியையும் தோற்கடிக்கவேண்டிய தேவையும் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒவ்வொரு உறுப்பினருக்கும்இருப்பதாகவும் சந்திரிக்கா குமாரனதுங்க வலியுறுத்தியிருக்கின்றார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேறி வேறு கட்சிகளில் யார்இணைந்துகொண்டாலும், எந்தவொரு நிலையிலும் தான் கட்சியை விட்டு வெளியேறப் போவதில்லை என்றும்சந்திரிக்கா உறுதியளித்துள்ளார். இதனால் மீண்டும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைவெற்றிபெறச் செய்து கட்சியை கட்டியெழுப்புவதற்காக உன்மையாகவே கட்சியை நேசிக்கும்அனைவருடனும் இணைந்து அர்ப்பணிப்புடன் செயல்பட தான் தயாராக இருப்பதாகவும் சந்திரி்க்காகுமாரனதுங்கள் தனது ஊடக அறிக்கையில் மிகத் தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றார்.

முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக நியமித்த, அவரது விசவாசிகளுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கிய சிறிலங்கா அரச தலைவரானசுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேனவின் அண்மைக்கால நடவடிக்கைகளால்கடும் அதிருப்தியில் இருக்கும் சந்திரிக்கா, தொடர்ச்சியாக மௌனம்காத்துவந்த நிலையில் நாடாளுமன்ற கலைப்பு தொடர்பிலும் எந்தக் கருத்தையும் வெளியிட்டிருக்கவில்லை.

இந்த நிலையில்பொதுத் தேர்தலுக்கு கட்சிகள் தீவிரமான தயார்படுத்தல்களில் ஈடுபட்டுள்ள நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தாமரை மொட்டுக்கட்சியில் இணைந்து போட்டியிடவதா அல்லது தனித்து போட்டியிடுவதா என்ற கலந்துரையாடல்கள்இடம்பெற்றுவரும் நிலையிலேயே சந்திரிக்கா குமாரனதுங்க தனது மௌனத்தைக் கலைத்து, தனது பெற்றோர்களால் உருவாக்கப்பட்ட சுதந்திரக் கட்சியை பாதுகாக்க தன்னாலானஅனைத்தையும் செய்யத் தயார் என அறிவித்திருக்கி்ன்றார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top