News

மீண்டும் வெடித்தது பெரும் சர்ச்சை! சபாநாயகரின் கடிதத்தை ஏற்க மறுத்த மைத்திரி

பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து சபாநாயகர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீண்ட சர்ச்சைகளுக்க பின்னர் இன்று நாடாளுமன்றம் கூடிய போது பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வந்திருந்தது.

இந்த பிரேரணைக்கு ஆதரவாக 122 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு சபாநாயகரிடம் கையளித்திருந்தனர்.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்திருந்தது.

இவ்வாறான நிலையிலேயே, பிதமர் மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து சபாநாயகர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top