News

முல்லைத்தீவில் மர்மமான முறையில் முன்னாள் போராளி உயிரிழப்பு!

முல்லைத்தீவு, விசுவமடு பகுதியில் முன்னாள் போராளி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் இவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குமாரபுரம் பகுதியில் வசித்து வரும் 29 வயதுடைய மரிய ஜெபேசன் விஜிதன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் புனர்வாழ்வு பெற்று, கடந்த மூன்று ஆண்டுகளாக தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் திடீரென உயிரிழந்துள்ளார், அவரது சடலம் புதுக்குடியிருப்பு மருத்துவ மனை கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

எனினும், இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது இவரது உயிரிழப்பு தொடர்பில் உறுதியான தவகவலை வெளியிட முடியாத காரணத்தால் இவரது மரபணுக்கள் ஆய்விற்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக மருத்துவ மனை மரணவிசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த முன்னாள் போராளி திடீரென உயிரிழந்தமைக்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

முகப்புக்கு செல்லலங்காசிறிக்கு செல்ல

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top