News

மைத்திரிக்கு எதிராக 118 பேர் போர்கொடி! சபாநாயகருக்கு அழுத்தம்

ஜனாதிபதியின் நடவடிக்கைகள் சட்டத்திற்கு முரணானது என தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் 118 பேர் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் தெரிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந் தராஜபக்சவை பிரதமராக அறிவித்ததுடன், புதிய அமைச்சரவை ஒன்றையும் ஏற்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் இவை அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல்கள் அனைத்து சட்டத்துக்கு முரணாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 118 பேர் சபாநாயகருக்கு அறிவித்துள்ளனர்.

ஜனாதிபதி அறிவித்தாலோ, அறிவிக்காவிட்டாலோ, சபாநாயகர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சகல கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல்கட்சி தலைவர்களுக்கும் சபாநாயகர் கருஜயசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நாடாளுமன்ற கட்டித்தொகுதியில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர்களுட்பட மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பிளர்கள் பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.

இதன் போது ஜனாதிபதியின் செயற்பாடுகள் சட்டத்துக்கு முரணானது என்பதற்கு தெளிவான பதில் கிடைக்பெற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜக்கருனா சுட்டிக்காட்டடினார்.

சபாநாயகருக்கும் அரசியல் கட்சிதலைவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் முடிவுடைந்தவுடன், இன்று அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்தக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை சுட்டிகாட்டினார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top