News

மைத்திரியின் இழிவான உரை! பதிலடி கொடுக்கும் மங்கள…

இரத்தம் குடிக்கும் அட்டையை விடவும் வண்ணாத்துப்பூச்சி மேல் என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றையதினம் மைத்திரி – மஹிந்த தரப்பினால் நடத்தப்பட்ட “ஜனமஹிம” என்னும் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஓரினச் சேர்க்கையாளர் என்ற அர்த்தத்தில் ஜனாதிபதி மைத்திரி, வண்ணாத்துப்பூச்சி என்ற பதத்தை பயன்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில், இரத்தம் குடிக்கும் அட்டையாக இருப்பதை விடவும் வண்ணாத்துப்பூச்சியாக இருப்பது மேல் என மங்கள தெரிவித்துள்ளார்.

பொதுவாக மங்கள சமரவீரவிற்கு எதிராகவும் ஓரினச் சேர்க்கையாளர் என்ற பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top