News

ரொறன்ரோவில் குளிர்கால வானிலை தீவிரம்; சாரதிகளுக்கு எச்சரிக்கை!

ரொறன்ரோவில் குளிர்கால வானிலை தீவிரமடைந்து காணப்படுவதால் சாரதிககள் அவதானமாக செயற்படுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பானது, ரொறன்ரோவின் வோகன், ரிச்மண்ட் ஹில், மார்க்கம், பிக்கிரிங், ஓஷவா மற்றும் தெற்கு டர்ஹாம் பிராந்தியம் பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பு தொடர்பாக, சுற்றுசூழல் கனடா இன்று (புதன்கிழமை) விசேட வானிலை அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தது.

அதில், குளிர்கால வானிலை தொடர்ந்தும் நீடிப்பதால் ரொறன்ரோ மற்றும் அதனை அண்டிய பெரும்பாக்கத்தில் உள்ள வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும்,இந்த காலநிலை காரணமாக வீதிகளில் பனிப்பொழிவு ஏற்படும் என்றும் இதன் காரணமாக சாரதிகள் அவதானமாக இருக்குமாறும் எச்ச்சரித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top