Canada

ரொறன்ரோவில் 90-வது கொலை சம்பவம் அரங்கேற்றம்!

ரொறன்ரோ நகரில் இவ்வாண்டின் ஆரம்பம் முதல் இதுவரை 89 கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், நேற்று 90-வது கொலை சம்பவம் அரங்கேரியுள்ளது.

குறித்த சம்பவமானது, டொராண்டோ நகரத்தின் கிழக்குப் பகுதியில் அருகே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 1;30 மணிக்கு குறித்த நபர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உள்ளூர் பொலிஸார் காயங்களுடன் இருந்த குறித்த நபரை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இருப்பினும் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் டொரண்டோ, அதிகளவு கொலை சம்பவங்கள் பதிவான கொடூரமான ஆண்டு என்ற மோசமான சாதனையே பதிவு செய்யப்படவுள்ளது.

முன்னதாக, கடந்த 2016ஆம் ஆண்டு 63ஆக காணப்பட்ட படுகொலைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 53 -ஆக குறைவடைந்த நிலையில், இந்த ஆண்டு மீண்டும் வெகுவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top