News

வத்திக்கான் தூதரகத்தில் மனித எலும்புக்கூடுகள்: வெளிச்சத்துக்கு வந்த 35 ஆண்டு கால மர்மம்

இத்தாலியில் வந்திக்கான் தூதரக வளாகத்தில் இருந்து சில தினங்களுக்கு முன்னர் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் 35 ஆண்டுகளுக்கு முன்னர் மாயமான இளம்பெண்களுடையது என சந்தேகம் எழுந்துள்ளது.

இவர்களில் ஒருவர் வத்திக்கான் நகரின் செல்வாக்கு மிகுந்த நபரின் மகள் என கூறப்படுகிறது.

1983 ஆம் ஆண்டு ஒன்றரை மாதத்தினிடையே மாயமான இமானுவேலா ஒர்லாண்டி மற்றும் மிரெலா க்ரிகோரி ஆகிய இருவருல் ஒருவரின் சடலமாக இருக்கலாம் என சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

தூதரக வளாகத்தில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் கட்டுமான வேலைகள் நடைபெற்று வந்த நிலையிலேயே இந்த எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் இத்தாலி பத்திரிகையாளர் ஒருவரால் உடனடியாக வெளியிடப்பட்டது. கைப்பற்றப்பட்ட எலும்புக்கூடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வும், அந்த கட்டிடம் நிறுவப்பட்ட காலகட்டமும் கணக்கில் எடுத்துக்கொண்ட அதிகாரிகள் 35 ஆண்டுகளுக்கு முன்னர் மாயமானதாக புகார் அளிக்கப்பட்ட வழக்கு தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இமானுவேலா வத்திக்கான் தூதரகத்தில் முக்கிய அதிகாரி ஒருவரின் மகளாவார். இவர் மாயமாவதற்கு சில மணி நேரம் முன்னர் பச்சை நிற வாகனம் ஒன்றில் கண்டதாக சிலர் அப்போது பொலிசாருக்கு தகவல் அளித்திருந்தனர்.

மட்டுமின்றி இமானுவேலா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்திருக்கலாம் எனவும் அப்போது செய்திகள் பரவின.

மேலும் இரண்டாம் போப் ஜான் பாலை கொலை செய்ய முயன்ற துருக்கி கொலையாளியை விடுவிக்கும் பொருட்டு இமானுவேலா கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் தகவல் பரவியது.

இசை வகுப்பு ஒன்றில் கலந்துகொள்ளும் பொருட்டு தமது குடியிருப்பில் இருந்து சென்ற இமானுவேலா அதன் பின்னர் வீடு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

முகப்புக்கு செல்லலங்காசிறிக்கு செல்ல

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top