Canada

வன்கூவாரில் வளர்ப்பு நாய் ஒன்றின் வெறிச்செயல்! 4பேர் படுகாயம்..

கனடாவின் வன்கூவர் தீவில் வசித்து வரும் தம்பதியினரின் குடும்பத்தை சேர்ந்த நான்கு நபர்களை வளர்ப்பு நாய் ஒன்று கொடூரமாக தாக்கியத்தில் அவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவமானது, கனடாவின் வன்கூவர் தீவில் வசித்து வரும் தம்பதியினரின் வீட்டில் சனிக்கிழமை காலை அரங்கேறியுள்ளது.

சம்பத்தன்று, ஜான்சனின் குடும்ப உறுப்பினர்களான அவரது வருங்கால கணவர் மற்றும் அவரது தந்தை ஆகியோர் வீடியோ கேம் விளையாடி கொண்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராதவிதமாக கடந்த ஆறு மாதங்களாக தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாய் ஒன்று அவர்கள் இருவரையும் கொடூரமாக தாக்கியது.

இதையடுத்து, அதனை தடுக்க வந்த ஜான்சன் மற்றும் அவரது அத்தையையும் தொடர்ந்து தாக்கியதில் அவர்கள் கொடூரமான முறையில் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், மருத்துவ சிகிக்சை அளிக்கப்பட்டதில் அடிப்படையில் அவர்கள் அனைவரும் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top