Canada

வாகன ஓட்டிகளிடம் போதை மருந்து சோதனை செய்யும் 15 இயந்திரங்கள் அறிமுகம்!

வாகன ஓட்டிகளுக்கு போதை மருந்து சோதனை மேற்கொள்ளும் 15 இயந்திரங்களை சாஸ்கட்சுவான், வரும் ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கிறது.

குறித்த இயந்திரங்களை, டிராஜெர் பாதுகாப்பு கனடா நிறுவனத்திலிருந்து வாங்குவதற்கு சாஸ்கட்சுவான் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதக்க தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது.

இதன் ஒரு இயந்திரத்தின் மதிப்பு, சுமார் 6000 அமெரிக்க டொலர்கள் என கணக்கிடப்படுவதாக சாஸ்கட்சுவான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த சோதனை இயந்திரங்களின் மூலம், போதை மருந்து உட்கொண்ட சாரதிகளை எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top