Canada

ஸ்கார்பரோ பகுதியில் திடீர் துப்பாக்கிச் சூடு; ஒருவர் படுகாயம்!

ஸ்கார்பரோ பகுதியில் நள்ளிரவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஆண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக,பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது,பிஞ்ச் அவென்யூ மற்றும் பிர்ச்மவுன் சாலைக்கு அருகிலுள்ள கிளெண்டுவர் சர்க்யூட் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை சுமார் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக, கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில், இருந்த ஆண் ஒருவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாகவழக்கு பதிவு செய்த பொலிஸார் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top