Canada

கனடா விமான ஓடுபாதை ஈரமாக இருந்ததால் நிற்காமல் வழுக்கிச் சென்ற சரக்கு விமானம் ஒன்று ஆண்டன்னா ஒன்றில் மோதி கடும் சேதத்திற்குள்ளாகியது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த நான்கு விமான ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Halifax Stanfield விமான நிலைய விமான ஓடுபாதையில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. போயிங் 747 ரக சரக்கு விமானமான அந்த விமானம் ஈரமான விமான ஓடுபாதையில் இறங்க முற்படும்போது நிற்காமல் வழுக்கிச் சென்று ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்றது.

சென்ற வேகத்தில் அருகிலிருந்த ஒரு ஆண்டன்னாவில் மோதியதில் அதன் நான்கு எஞ்சின்களும் தெறித்து ஓடியதோடு அதன் வால் பகுதியின் அடியில் தீயும் பற்றியது.

விமானத்தின் நுனியும் சேதமடைந்துள்ளதோடு, விமானத்தின் அடிப்பாகம் மிக மோசமாக சேதமடைந்துள்ளது.

சிகாகோவிலிருந்து வந்த அந்த விமானம் உயிருள்ள லாப்ஸ்டர்களை ஏற்றிக்கொண்டு சீனாவுக்கு செல்ல இருந்தது.

விபத்து குறித்த விசாரணை தொடங்கியுள்ள நிலையில் விமான ஓடுதளம் ஈரமாக இருந்ததுதான் விபத்துக்கு முக்கிய காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.

விமானத்தின் பின்புறமாக இருந்து பலத்த காற்று வீடியதும் விபத்துக்கு இன்னொரு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பாக தொடர்ந்து நிபுணர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

முகப்புக்கு செல்லலங்காசிறிக்கு செல்ல

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top