Canada

பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா-கனடா இடையே ஒப்புதல்!

சீனா மற்றும் கனடா ஆகிய இரு தரப்பினரும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளன.

குறித்த ஒப்புதலானது, சீன மற்றும் கனேடிய அதிகாரிகளுக்கு இடையே பீஜிங்கில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற பொருளாதார மற்றும் நிதி மூலோபாய பேச்சுவார்த்தையின் போது எட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சீன அரசவை உறுப்பினர் வாங் யோங் கூறுகையில், பொருளாதார உலகமயமாக்கலானது பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளது.

உலகளாவிய பொருளாதாரத்தில் மேலும் முன்னேற்றங்கள் காணப்பட வேண்டியுள்ளது. இவ்வாறானதொரு தருணத்தில் கனடாவுடன் தொடர்பாடலையும், ஒத்துழைப்பையும் அதிகரிக்க எதிர்பார்த்துள்ளோம்.

அதற்கமைய ஒருதலைப்பட்ச மற்றும் பாதுகாப்புவாதத்தை கூட்டாக இணைந்து எதிர்ப்பதுடன், சர்வதேச வர்த்தகத்தில் விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச வர்த்தக அமைப்புகளை பாதுகாத்து அதனை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து கனேடிய நிதியமைச்சர் பில் மோர்னியூ தெரிவிக்கையில், சீனாவுடனான ஒரு நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான உறவின் மீது கனேடிய அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது.

இதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார வாய்ப்புகளை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள இரு தரப்பு இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியமாகும்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக மோதல் வலுவடைந்து வருகின்ற நிலையில், சீனாவிற்கும், கனடாவிற்கும் இடையே வர்த்தக ஒத்துழைப்பு வலுவடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top