Canada

எட்மன்டன் பகுதியில் துப்பாக்கு சூடு: ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!

எட்மன்டன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கு சூடு சம்பவத்தில் ஆண் நபர் ஒருவர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த துப்பாக்கு சூடு சம்பவமானது, எட்மன்டன் Grande Prairie 132 Avenue மற்றும் 100 Street பகுதியில் செவ்வாய் கிழமை காலை சரியாக 4-மணியளவில் அரங்கேறியுள்ளது.

RCMP தகவலில் படி, ஒரு திருடப்பட்ட வாகனத்தை நிறுத்த அதிகாரிகள் முயற்சி செய்த போது இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஆண் நபர் ஒருவர் காயமடைந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள RCMP பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Latest News

To Top