News

அமெரிக்காவில் சதியில் ஈடுபட்ட நான்கு பேர் கைது!

அமெரிக்காவில் முஸ்லீம்களுக்கு எதிரான சதியில் ஈடுபட்ட ஒரு பருவ வயது சிறுவன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில், அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் வாழும் ஒரு சிறிய இஸ்லாமிய சமூகத்தை தாக்குவதற்காக திட்டம் போட்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

இதையடுத்து, குறித்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பருவ வயது சிறுவன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூன்று ஆண்களும் புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளனர்.

இதில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேக நபர்கள் வீட்டிலே தயாரிக்கும் வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது.

இதையடுத்து, குறித்த நபர்கள் மீது ஆயுதங்களை வைத்திருந்தது மற்றும் சதித்திட்டம் தீட்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

1980-களில் பாகிஸ்தானைச் சேர்ந்த மதகுரு ஒருவரால் உருவாக்கப்பட்ட இஸ்லாம் பெர்கை இவர்கள் தாக்குவதற்கு திட்டமிட்டிருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இஸ்லாமிய சமூகமொன்றை தாக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டும் சதித்திட்டம் ஒரு பள்ளி சிறுவன் கொடுத்த துப்பு மூலமே தெரியவந்திருக்கிறது.

இஸ்லாம்பெர்க் சமூகம், பயங்கரவாதிகளுக்கு பயிற்சியளிக்கும் முகமாக இருக்கிறது என சிலர் இதனை ஒரு சதி நடவடிக்கையாக குற்றம் சாட்டி வந்தனர் குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top