News

அமெரிக்காவில் பனிப்புயல்- பல லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

அமெரிக்காவின் நியூ யோர்க் நகரில் கடுமையான குளிர் காலநிலை நிலவுவதால் மக்களை இயன்றவரை வீடுகளில் தங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நியூ யோர்க் நகரின் சில பகுதிகள் பனிப்புயலின் காரணமாக ஏற்கனவே 10 முதல் 15 அங்குல பனியால் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வீசிவரும் வலுவான காற்று பனியை வீதிகளுக்கு கொண்டு சேர்ப்பதன் காரணமாக போக்குவரத்து தடைபட்டுள்ளது.

மேலும் புதன்கிழமை அளவில் நியூ யோர்க் நகரின் காலநிலை -40 டிகிரி அளவிற்கு குறையக்கூடுமெனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மிகப்பாரிய பனிப்புயல் காரணமாக அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து மற்றும் கிழக்கின் மற்ற பகுதிகள் மிகக் குளிரான காலநிலைக்கு முகம்கொடுத்துள்ளன.

இக்காலநிலை காரணமாக தரைவழி மற்றும் வான்வழிப் போக்குவரத்துகளில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 5000 விமான சேவைகள் நேற்றைய தினம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top