Canada

இரண்டு வாகன மோதலில் குழந்தை உட்பட இருவர் பலி!

எட்மன்டன் பகுதியில் இடம்பெற்ற வாகன மோதலில் குழந்தை உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது, ராக்கி மவுண்ட் ஹவுஸ் வடக்கில் 756 நெடுஞ்சாலை பகுதியில் புதன் காலை 11:30 -மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில், எதிர் எதிர் திசையில் வந்த இரண்டு வாகனங்கள் கட்டுப்பாட்டை தனது கட்டுப்பாட்டை இழந்ததில் கார் மீது ட்ராக் மோதிக்கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், கார் ஒன்றில் பயணித்த பெண் மற்றும் நான்கு வயது குழந்தை ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மற்றொரு வாகனத்தில் பயணித்த இரண்டு நபர்கள் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த சமப்வ தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணை முன்னெடுத்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top