News

இலங்கைக்குள் ஊடுருவியுள்ள தீவிரவாதிகள்? அதிரவைக்கும் தடயங்கள்! தீவிர தேடுதல் வேட்டையில் இராணுவம்!!

இலங்கையின் புத்தளம் வனாத்தவில்லு பகுதியில் மீட்கப்பட்ட 100 கிலோ வெடிமருந்துகள் தொடர்பில் வெளிவரும் தகவல்கள் பல இலங்கை மக்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.

குறித்த சம்பவத்தின் பின்னனியில் வெளிநாட்டு தீவிரவாத மதவாத அமைப்புகளின் செயற்பாடுகள் உள்ளதாகவும் இலங்கையில் பல ஆண்டுகளுக்கு முன்னரே குறித்த வெளிநாட்டு தீவிரவாத அமைப்புக்களின் செயற்பாடுகள் இருந்ததற்கான ஆதாரங்கள் பதிவாகியிருந்த நிலையிலேயே தற்போது அதன் உறுப்பினர்களா இலங்கையில் உள்ள அப்பாவி முஸ்லீம் இலைஞர்களை பாவிக்கும் செயற்பாடுகள் நடைபெற்று வருகிறதா என்ற சந்தேகம் வலுத்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.இது குறித்து நாடுபூராகவும் பாதுகாப்பு தரப்பினர் தேடுதல் வேட்டைகளை மேற்கொண்டு வருவதுடன் பல குழுக்கள் நியமிக்கப்பட்டு தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.

குற்றப் பின்னனி!
தற்போது சில நாட்களாக வடகிழக்கு ,தெற்கு என புத்தசிலைகள் ,இந்து மத சிலைகள்,ஆலயங்கள் தற்போது அங்கொன்று இங்கொன்றாக சேதமாக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

அதே நேரம் கடந்த மாதம் கேகால்ல மாவட்டத்திலும் மாவனெல்ல பகுதியில் ஒரே நாளில் மூன்று புத்த சிலைகள் தகர்க்கப்பட்டது அதே நாட்களில் மன்னாரில் இந்த ஆலய சிலைகள் தகர்த்து சேதமாக்கப்பட்டது,

மாவனெல்ல பகுதியில் சிலை தகர்த்து அதிகாலை கிழக்கு மாகாண முஸ்லிம் பகுதியை நோக்கி தப்பி செல்ல முயன்றவரை அப்பகுதி சிங்கள இளைஞர்கள் கைது செய்து அடித்து துன்புறுத்தி போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து இன்னும் நான்கு பேர் கைது செய்யப்பட்டார்கள்,அதில் முஸ்லிம்களின் பணத்திற்கு கூலியாளராக இவர்கள் கொடுக்கும் நாசகார திட்டத்தை நிறைவேற்றுபவர்களாக இருந்தது விசாரணை மூலம் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியது,இவர்களிடம் கிடைத்த தகவலுக்கமைய புத்தளம் வண்ணாத்திவில் பகுதியில் முஸ்லிம் வியாபரி தென்னை மரதோட்டத்தில் நேற்றையதினம் பாரிய ஆயுதங்கள் பதுக்கி வைத்த நிலையில் அத்தோடு திருக்குரான் புத்தகங்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது,இன்னும் நான்கு முஸ்லிம் நபர்கள் இதனை தொடர்ந்து கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

பத்து வருடங்களின் பின்னர் மீட்கப்பட்ட மிகப்பெருமளவிலான வெடிமருந்துகள்!
இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் மீட்கப்பட்ட மிகப்பெருமளவிலான வெடிமருந்துகள் புத்தளம் வனாத்தவில்லு பகுதியில் மீட்கப்பட்ட வெடிமருந்துகள் என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதில் 100 கிலோகிராம் வெடிபொருட்கள் மற்றும் வெடிபொருட்களை தயாரிக்கும் ஜெலட்டின் கம்பி நைட்ரேட் 20 அமிலம் லிட்டர், ஆறு கேன்கள் ஒவ்வொரு பல்புகள் பங்கு தடை, பேலோடுக்கு (வெடிபொருள்கள்) கிட்டத்தட்ட 75 கிலோ, கச்சா அழித்ததற்காக பயன்படுத்தப்படும் sifō 12 துப்பாக்கி மற்றும் patōram பங்கு, ஒரு விமான துப்பாக்கி, இரண்டு கொட்டிலில் 20 நாட்களுக்கு தேவையான உலர் உணவு நிறைய பாதுகாப்பான உள்ளது ஸ்டாக், கணினிகள், கேமராக்கள், முஸ்லீம் சமய மத புத்தகங்கள் உட்பட கைப்பற்றப்பட்டப்பட்டுள்ளது,

இத்தோடு தொடர்புடைய பல குற்றவாளிகள் விரைவில் கைது செய்ய வாய்ப்பு உள்ளது.புத்தளம் வனாத்தவில்லு பகுதியில் மீட்கப்பட்ட 100 கிலோ வெடிமருந்துகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் இந்த வெடிமருந்துகளிற்கும் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளிற்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

வெளிநாட்டில் உள்ள பயங்கரவாத அமைப்புகளிற்கும் உள்ளுர் தீவிரவாத குழுக்களிற்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெறுவதாக சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்

நாங்கள் தற்போது மிகவும் தீவிரமான ஆழமான உணர்வுபூர்வமான விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம் என தெரிவித்து அதிகாரியொருவர் வெடிமருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமைக்கான உண்மையான காரணத்தை கண்டறிவதற்கு சிறிது காலம் எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் மீட்கப்பட்ட மிகப்பெருமளவிலான வெடிமருந்துகள் என்பதால் இந்த விசாரணைக்கு மிகுந்த முக்கியத்துவத்தை வழங்குகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது எங்களால் கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் தீவிரவாத, மதவாத அமைப்புகளின் உறுப்பினர்களா என்பது குறித்தும் விசாரணை செய்துவருகின்றோம் எனவும் விசாரணை செய்துவருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.குறித்த சம்பவத்தின் ஊடாக இலங்கை பொதுமக்கள் மத்தியில் ஒரு வித அச்சம் ஏற்பட்டுள்ளது குறிப்பாக முஸ்லீம் சமூகத்தினரிடமும் முஸ்லீம் இளைஞர்களிடமும் ஒரு வித அச்சநிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தின் ஊடாக முஸ்லீம் சமூகத்தினர் இலக்குவைக்கப்படுவதாக அவர்கள் கருதுகின்றனர். எது எப்படி இருப்பினும் உண்மையான குற்றவாளிகளை கண்டறிவதில் பாதுகாப்பு தரப்பினர் குறியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top