News

உங்களின் நிலைப்பாடு இதுதானா? அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த சிறீதரன் எம்.பி

வடக்கு கிழக்கு பகுதிகள் தொடர்பில் இந்த அரசாங்கம் நிலைப்பாடு என்ன என்பது குறித்து கேள்விக்குறியாகவே இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வடக்கு கிழக்கில் காணப்படும் யுத்தப்பாதிப்புகளை மறைப்பதற்கு அரசாங்கம் முயற்சி செய்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்நதும் பேசிய அவர்,

“யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டியது இந்த அரசாங்கத்தின் கடமையாகும்.

எனினும், தமிழர்களை தொடர்ந்தும் கையேந்தும் நிலையிலேயே இந்த அரசாங்கம் வைத்திருக்கின்றது. இதுவா இந்த அரசாங்கத்தின் விருப்பம். யுத்தம் நிறைவடைந்து 10 ஆண்டுகள் ஆகப்போகின்றது.

எனினும், பபோரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொழில் வழங்கக்கூடிய வல்லமை அரசாங்கத்திற்கு இல்லை.

வடக்கு கிழக்குத் தொடர்பான அபிவிருத்திகள் குறித்து அரசாங்கம் சிறிதளவேனும் அக்கறை கொள்வதாகத் தெரியவில்லை.

அண்மையில் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர தீர்வு இதுவரையிலும் வழங்கப்படவில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top