India

உபி.யில் பள்ளி வேனில் கேஸ் சிலிண்டர் வெடித்து 16 மாணவர்கள் தீக்காயம்

 உத்தர பிரதேசத்தில் கேஸ் மூலம் இயங்கும் பள்ளி வேனில் இருந்த சிலிண்டர் வெடித்து 16 மாணவர்கள், 2 பெண்கள் காயம் அடைந்தனர்உத்தரபிரதேச மாநிலம், பதோஹி மாவட்டத்தில் உள்ள கியான்பூர் நகரத்தில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இதற்கு சொந்தமான பள்ளி வேன் ஒன்று, மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளியை நோக்கி நேற்று சென்றது. கேஸ் மூலம் இயங்கும் அந்த வேன், நாதைபூர் அருகே அருகே சென்றபோது திடீரென அதில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, வேனை ஓட்டி சென்ற டிரைவர் தப்பியோடினார். இந்த விபத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் 16 பேர் தீக்காயம் அடைந்தனர். அவர்களை காப்பாற்ற முயன்ற 2 பெண்களுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. 

இது பற்றி அறிந்த போலீசார் மாணவர்களை மீட்டு வாரணாசியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதையடுத்து பள்ளி நிர்வாகியும் தலைமறைவானார். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest News

To Top