India

உயிரை காப்பாற்ற வேண்டிய 2 நர்ஸிங் மாணவிகளின் வெறிச்செயல்: வீடியோ வெளியானதால் அதிர்ச்சி

மேற்குவங்க மாநிலத்தின் கொல்கத்தா நகரில் அமைந்துள்ள என்.ஆர்.எஸ். மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 16 நாய்க்குட்டிகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்த கண்டுபிடிக்கப்பட்டது.

மருத்துவமனை நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் உத்தரவின் பேரில் கால்நடைத்துறையில் இறந்துபோன நாய்க்குட்டிகளை பரிசோதனை செய்துள்ளனர்.

அதில், அந்த நாய்க்குட்டிகள் அனைத்தும் கட்டிப்போட்டு விஷம் வைத்தும், சாக்கு மூட்டைகளில் அடைத்து வைத்தும் அதன் பின்னர் கொடூரமாக தாக்கியும் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் நாய்க்குட்டிகளை கொடூரமாக தாக்கி கொன்ற 2 நர்சிங் மாணவிகளை பொலிசார் கைது செய்தனர். அவர்கள் நாய்க்குட்டிகளை தாக்கிய போது எடுத்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top