Canada

எட்டோபிகோக்கிலுள்ள நெடுஞ்சாலை 401 வீதி மூடப்பட்டது!

நெடுஞ்சாலையில் ட்ரக் டிரெயிலர் ஒன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதை அடுத்து எட்டோபிகோக்கிலுள்ள நெடுஞ்சாலை 401 இன் வளைவு மூடப்பட்டது.

குறித்த விபத்து, நெடுஞ்சாலை 401 இன் கிழக்குப் பாதைகளின் நெடுஞ்சாலை 427-ன் வடபகுதி வழித்தடங்கள் பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்றது.

இதன் போது குறித்த ட்ராக் டிரெயிலர் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் வீதிகளில் சிதறி கிடந்துள்ளது.

இருப்பினும் சம்பவத்தில் காயம் ஏற்பட்டமை தொடர்பிலும், குறித்த வீதி எவ்வளவு நேரம் மூடப்பட்டு இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகவில்லை.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் ஒன்ராறியோ மாகாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top